அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசித்து பதற்றமான வாக்குச்சாவடிகளை இந்த வாரத்திற்குள் கண்டறிய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுதாரரின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் ஆணையிட்டனர். தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுகிறது என வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தல் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
Comments