எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா மகன் வீட்டில் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

0 3723
எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா மகன் வீட்டில் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

சென்னையில், ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் பிரகாஷின் பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையிலுள்ள வீட்டில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.

பிரகாஷ் நடத்தும் சாப்ட்வேர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
3 மணி நேரம் வீட்டில் நடத்திய சோதனையின் முடிவில் 2 பைகளில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கொண்டு சென்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்காததால், செம்பியம் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற பிறகே வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments