கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை திட்டம்

0 1615
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை திட்டம்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்கும் நோக்குடன் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி போட தமிழக சுகாதாரத் துறை முடிவு உள்ளது.

தற்போது தமிழக சுகாதார துறையிடம் 11 புள்ளி 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து மேலும் 10 லட்சம் தடுப்பூசி மருந்துகள் விரைவில் தமிழகத்திற்கு கிடைக்கும்.

தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், நேற்று வரை 23 புள்ளி 6 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments