இந்த தேர்தலில் கேரளாவில் பாஜக தனது முத்திரையை பதிக்கும்: அமைச்சர் அமித் ஷா

0 1290
இந்த தேர்தலில் கேரளாவில் பாஜக தனது முத்திரையை பதிக்கும்: அமைச்சர் அமித் ஷா

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளால் விரக்தி அடைந்துள்ள கேரள மக்கள் அவற்றுக்கு மாற்றாக இந்த முறை பாஜகவை பார்க்கின்றனர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கொச்சி அருகே திருப்பூணித்துறையில் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் வாகனப்பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி ஒரு குழப்பமான நிலையில் உள்ளது என்றார் அவர்.

கேரளாவில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் அவர்களுடன் இணைந்து போட்டியிடுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார். இந்த தேர்தலில் கேரளாவில் பாஜக தனது முத்திரையை பதிக்கும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments