நெல்லை, குமரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1127
நெல்லை, குமரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் மைலாடியில் 2 சென்டி மீட்டரும், நாகர்கோயிலில் ஒரு சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments