காதல் கணவர் விபத்தில் பலி; உடலை பார்த்த மறு நிமிடம் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

0 81817
விபத்தில் பலியான ரமேஷ் மற்றும் தற்கொலை செய்து கொண்ட சரளா

காதல் கணவர் விபத்தில் பலியானதால், ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலேயே மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ரமேஷ் . இவர் , தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து  கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார், கிளியனூர் போலீசார் அவரின் உடலை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேசுடன் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணமடைந்த ரமேசுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ரமேஷ் சரளா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ரமேஷ் இறந்து போன தகவலை கேட்டு சரளா அலறி துடித்துள்ளார். பின்னர், தன் கணவரின் உடலை பார்க்க ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றுள்ளார். கணவரின் உடலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அவர் காணாமல் போனார். உறவினர்கள் அவரை தேடிய போது, , ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலிருந்த கழிவறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சரளாவும் இறந்து போனார். கணவர் இறந்ததையடுத்து, மனைவியும் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர், சொந்த ஊருக்கு கொண்டு சென்று கணவன்,மனைவிக்கு இறுதிச்சடங்குகளை உறவினர்கள் மேற்கொண்டனர்.கணவர் மீது மனைவி கொண்டிருந்த உண்மை காதலை கூறி கூறி ஏந்தூர் கிராம மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments