புயல் நிவாரணத்துக்கு வழங்கிய பத்தாயிரம் கோடி ரூபாயை மம்தாவின் மருமகன் சுருட்டிக் கொண்டார் - அமைச்சர் அமித்ஷா

0 1168

புயல் நிவாரணத்துக்கு வழங்கிய பத்தாயிரம் கோடி ரூபாயை மம்தா பானர்ஜியின் மருமகன் சுருட்டிக்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அம்பன் புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்கியதாகத் தெரிவித்தார். அந்தத் தொகை முழுமையாக மக்களுக்குச் சென்று சேரவில்லை என்றும், அதை மம்தாவின் மருமகன் அபிசேக் பானர்ஜியும், அவர் கூட்டாளிகளும் சுருட்டிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் புயல் நிவாரண நிதியில் ஊழல் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி, புயல் நிவாரணத்துக்கு ஆறாயிரம் கோடி ரூபாயை மாநில அரசு கோரியதாகவும், மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments