யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்..!

0 4551
"அடிச்சு தொரத்து கர்ணா"..! யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 2 நிமிடம் ஓடும் அந்த டீசரில் நடிகர் தனுஷின் அறிமுகம் கடைசியில் இருக்கிறது.

கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகிகளில் வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments