இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் நெதன்யாஹூ கட்சி வெற்றி

0 2166
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் நெதன்யாஹூ கட்சி வெற்றி

ஸ்ரேலில் நடந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்று உள்ளார்.

பொருளாதார சீர்கேடு, கொரோனா பரவலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் இஸ்ரேல் பிரதமருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டு அதன் விளைவாக அங்கு கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடக்கும் சுழல் நிலவியது.

4-வது முறையாக நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

இதுகுறித்து நெதன்யாஹூ தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தலில் அமோக வெற்றி அளித்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

பெருவாரியான தொகுதிகளை நெதன்யாஹூவின் லிக்குட் கட்சி வெல்லாத நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் 5-வது தேர்தலுக்கும் வாய்ப்பு வரலாம் என மக்கள் அச்சம் கொண்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments