அமெரிக்கா விலங்கியல் பூங்காவில் யானை வளர்ப்புப் பகுதிக்குச் சென்ற இளைஞரை விரட்டியடித்த யானை

அமெரிக்கா விலங்கியல் பூங்காவில் யானை வளர்ப்புப் பகுதிக்குச் சென்ற இளைஞரை விரட்டியடித்த யானை
அமெரிக்கா விலங்கியல் பூங்காவில் யானையின் தாக்குதலில் இருந்து தந்தையும், குழந்தையும் நூலிழையில் உயிர் தப்பினர்.
சான்டியாகோ விலங்கியல் பூங்காவில் ஆப்பிரிக்க யானைகள் வளர்க்கப்படும் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தடுப்புகளையும், மின்வேலியையும் தாண்டி உள்ளே நுழைந்தார்.
யானையை பின்னால் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த யானை அந்த நபரை திடீரென விரட்டியது.
நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட அவர், மின்வேலியைத் தாண்டி வெளியே வந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையிலிருந்த கைக்குழந்தை கீழே விழுந்தது. கணநேரத்தில் குழந்தையையும் அவர் காப்பாற்றினார்.
Comments