இட ஒதுக்கீட்டின் வரம்பை மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம்

இட ஒதுக்கீட்டின் வரம்பை மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும்
இடஒதுக்கீடு வரம்பை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனஅமர்வு இட ஒதுக்கீட்டின் வரம்பு குறித்த வழக்குகளை விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில் கர்நாடக அரசும் தனது மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அடையாளம் காண்பதும் அவற்றுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதும் தனது உரிமை என்று வாதாடியது.
இட ஒதுக்கீட்டு வரம்பு 50 சதவீதத்தைக் கடக்கக் கூடாது என்ற இந்திரா சஹானி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசின் வாதத்துடன் தமிழகமும் கர்நாடகமும் உடன்பட்டன.
Comments