பான் கார்டை ஆதார் எண்ணுடன் வருகிற 31ந் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு உத்தரவு

0 24739
பான் கார்டை ஆதார் எண்ணுடன் வருகிற 31ந் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு உத்தரவு

பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்‍காவிட்டால் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பான்கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம், வருமான வரி சட்டத்தின்கீழ்  10ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதற்கான இறுதிக்கெடு கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக இதற்கான காலவரம்பு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments