பெட்ரோல்- டீசல் விலை குறையுமா? - நிதியமைச்சர் பதில்

0 4727
பெட்ரோல்- டீசல் விலை குறையுமா? - நிதியமைச்சர் பதில்

அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

நேற்று 127 திருத்தங்களுடன் மக்களவையில் நிதி மசோதா நிறைவேறியது. கடந்த பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் தொகை ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அதன் மீது வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த வரம்பு தற்போது 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காக குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments