ஸ்ரீப்ரியாவிடம் வாழ்வே மாயம் ரசிகன் வம்பு..! ஆத்தா வையும் காசு கொடு..!
மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீப்ரியாவிடம், நோயாளியான வெறித்தனமான ரசிகர் ஒருவர் பணம் கேட்டு வம்பு செய்ததால், அவரை போலீசிடம் சிக்கவைத்தார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக நடிகை ஸ்ரீப்ரியா களமிறங்கியுள்ளார். அவர் அந்த தொகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.
அங்கு இசைக்கப்பட்ட பேண்டு வாத்திய இசைக்கு தக்கப்படி இரு கையிலும் பேண்டேஜ் போட்ட நோயாளி தொண்டர் ஒருவர் குத்தாட்டம் போட்டார்.
அப்போது அங்கு வந்த வேட்பாளர் ஸ்ரீப்ரியாவை பார்த்து உற்சாகமான அவர் , தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என்று கையேந்த, எல்லோரும் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் பணம் தர இயலாது என்று ஸ்ரீபிரியா கூற, அந்த குடிகார நோயாளி அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்தார்
இதையடுத்து உஷாரான ஸ்ரீப்ரியா, பணம் கேட்ட, அந்த குடிகார தொண்டரை லாவகமாக பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினரிடம் சிக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்றார்
அந்த நோயாளி தொண்டர், வாழ்வே மாயம் காலத்தில் இருந்தே தீவிர கமல் ரசிகரான சிவகங்கையை சேர்ந்த பாண்டியராஜ் என்பதும் இருதய நோயாளியான அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி வந்ததாகவும், எதேச்சையாக நடிகை ஸ்ரீப்ரியாவை பார்த்ததும் அவரது கையால் பணம் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.
Comments