சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

0 72924

 

ஆதரவற்ற நிலையில் ஆட்டோவில் ஆட்டோவில் உறங்க சென்ற 'காதல்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பாபு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாத படங்களில் ஒன்று ’காதல்’ திரைப்படம். கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். சமூகத்தின் உண்மை நிலையை திரையில் பிரதிபலித்த இந்த திரைப்ப்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தில் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைகிற ’விருச்சிககாந்த்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் பாபு நடித்திருப்பார். மேன்சனில் தங்கியிருக்கும் ஒருவரிடம் போய் நடிக்க சான்ஸ் கேட்பதாக அவரது கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். தனது ராசி விருச்சிகம் என்றும், சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த் போல வரவேண்டும் என்பதற்காக தனது பெயரை விருச்சிககாந்த் மாற்றிவிட்டேன் என்றும், நடிச்சா ஹீரோ தான் சார்.. அப்புறம் சிம்.. பிம் என்ற வசனத்தை அப்பாவி முகத்துடன் பேசி அலப்பறை கூட்டியிருப்பார் நடிகர் பாபு. சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த படத்தில் பலராலும் மறக்க முடியாதபடி நடித்திருப்பார்.

ஆனால் அதன் பின்பு நடிகர் பாபுவுக்கு சரியான பட வாய்ப்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது தாய், தந்தையர் இருவரும் மரணமடைந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டார். கையில் பணமும் இல்லாமல், தனது பெற்றோரையும் இழந்த நிலையில் நடிகர் பாபு சாலையில் அலைந்து திரிந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட நடிகர்கள் சிலர் அவருக்கு உதவியும் உள்ளனர். மேலும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோவில் தனக்கு மீண்டும் படவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அதன்பின் போடப்பட்ட கொரோனா ஊரடங்கால் நடிகர் பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் மீண்டும் சாலையில் ஆதரவற்ற நிலையில் அலைந்து திரிந்துள்ளார்.

இந்த நிலையில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் இரவு தூங்க சென்றவர் செவ்வாயன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து திரையுலகில் வறுமை காரணமாக நிகழ்ந்து வரும் மரணங்களால் தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments