இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

0 5118
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

ங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

புனேவில் பகலிரவு ஆட்டமாக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவாண் 98 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி நிர்ணயித்த இலக்கை துரத்திய இங்கிலாந்து, 42.1 ஓவர்களில் 251 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்து வலுவான துவக்கம் அளித்தும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments