கொரோனா தடுப்பு தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

0 7451
நாட்டில் கொரோனாவின் 2ஆவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தொற்று தடுப்பு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவின் 2ஆவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தொற்று தடுப்பு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து சிறு,குறு நகரங்கள், ஊரகப் பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் தனிநபர் இடைவெளி, சானிடைசர் பயன்பாடு ஆகியவற்றை கட்டாயமாக்கி, அவை அமலாவதை உறுதிபடுத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்திற்குள்ளாகவும், மாநிலங்களுக்கு இடையிலும், பொதுமக்கள் சென்றுவரவும், சரக்குப் போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று அதிகம் பரவும் இடங்களில், கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து, மாவட்ட, மாநில நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments