செங்கல்பட்டு அருகே வேனில் எடுத்து செல்லப்பட்ட 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

0 1938
செங்கல்பட்டு அருகே வேனில் எடுத்து செல்லப்பட்ட 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே வாகன தணிக்கையின் போது, உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நாவலூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற கூண்டு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், 80 கிலோ தங்கம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், உரிய ஆவணங்களை நகைக்கடை உரிமையாளர் சமர்பித்தார். இதையடுத்து நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments