அ.தி.மு.க. எம்.பி முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் மரணம்..

0 4424
அ.தி.மு.க. எம்.பி முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் மரணம்..

திமுக மாநிலங்களவை எம்பியும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் காலமானார். அவருக்கு வயது 72.

இராணிப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, கூட்டணி நிர்வாகிகளோடு சென்று தீவிர வாக்குசேகரிப்பில் அவர் ஈடுபட்டார். மதிய உணவு இடைவேளைக்காக, இராணிப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர்பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

2011ஆம் ஆண்டு இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வாகி, அதன் உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 

முகமது ஜான் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமகவின் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments