இந்திய முப்படைகளில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல்

0 994
இந்திய முப்படைகளில் 1.07 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய முப்படைகளில் 1.07 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், முப்படைகளில் 1,07,505 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார். இதில் அதிகபட்சமாக ராணுவத்தில் சுமார் 86 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் 79,349 இளநிலை அதிகாரிகள் பணியிடங்களும், 6,975 அதிகாரிகள் பணியிடங்களும் நிரப்ப பட வேண்டும் என்றார். கடற்படையில் 12,317 பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற அவர், விமானப்படையில் 589 அதிகாரிகள் பணியிடங்களும், 7,231 ஏர்மேன் பணியிடங்களும் காலியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments