தென் மாவட்டங்களில் நாளை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

0 1211
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 24 ஆம் தேதி அன்று கரூரில் காலை 10.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அரவக்குறிச்சி தொகுதி பரமத்தி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம்,பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர் செம்பட்டி, திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆம் தேதி காலை மதுரை கிழக்கு தொகுதி ஒத்தக்கடையில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்து, காரைக்குடியில் பிரசாரத்தை முடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

26 ஆம் தேதி காலை திருப்பத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்கு சேகரித்து கயத்தாறில் பிரசாரத்தை முடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments