சிலம்பம் சுற்றும் அதிமுக... முகத்தை மூடும் திமுக..! மாஸ்க்கா…? மாஸா…?

0 2584
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணி வேட்பாளர், சிலம்பம் சுற்றி தனது திறமையை நிரூபித்த நிலையில், திமுக வேட்பாளரோ கொரோனா வரும் முன் காக்கும் விதமாக வீடு வீடாக மாஸ்க் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணி வேட்பாளர், சிலம்பம் சுற்றி தனது திறமையை நிரூபித்த நிலையில், திமுக வேட்பாளரோ கொரோனா வரும் முன் காக்கும் விதமாக வீடு வீடாக மாஸ்க் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

அதிமுக கூட்டணியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அசூர் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்ரீதர்வாண்டையார் சிலம்பத்தை சுற்றி தனது திறமையை நிரூபித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதே நேரத்தில் கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், முககவசம் கையுறை அணிந்தபடி தனது ஆதர்வாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அனைவரிடமும் துண்டுபிரசுரம் மட்டுமல்லாமல் ஆளுக்கு ஒரு முககவசத்தையும் வழங்கினார்.

கூட்டத்தில் முககவசம் அணியாமல் நின்றிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு சாகோட்டை அன்பழகன் மாஸ்க் அனிந்துவிட்டதோடு, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..!

கும்பகோணத்தில் சிலம்பம் சுற்றி திறமை காட்டிய வேட்பாளர் ஒருபக்கம், முன் எச்சரிக்கையாக மாஸ்க் வழங்கி வரும் வேட்பாளர் மறுபக்கம் என்று முக்கிய கட்சிகளின் பிரச்சாரத்தால் தேர்தல்களம் விறுவிறுப்பாக மாறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments