பிரச்சாரங்களில் அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1153

தேர்தல் பிரச்சாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதிகளை வகுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு இதுசம்பந்தமாக உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்துக்கு, அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் அந்த விதிகளை எதிர்வர இருக்கும் தேர்தல்களுக்கும் அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments