தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர்: சத்ய பிரதா சாஹு தகவல்

0 1062

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஏற்கனவே 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார். 

சோதனைச்சாவடிகளிலும்,  பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனும் அவர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களிலும் அவர்களுக்கு பணி ஒதுக்கப்படவுள்ளது. மொத்தமாக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments