எனக்கும் சுகர் இருக்கு, நானும் மாத்திரை சாப்பிடுகிறேன்... உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

0 2674
எனக்கும் சுகர் இருக்கு, நானும் மாத்திரை சாப்பிடுகிறேன்... உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

எனக்கும் சுகர் இருக்கு, நானும் மாத்திரை சாப்பிடுகிறேன் என்று வாக்காளர்களிடம்  உரையாற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர், பெண் வாக்காளர்களை கவரும் வகையில், தன் மூத்த மகள் ரிதன்ய பிரியதர்ஷினியை பிரச்சாரத்திற்கு உடன் அழைத்துச் செல்கிறார். பூதகுடி ஊராட்சி கல்குளத்துப்பட்டி மாதா கோயில் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த பத்தாண்டு காலமாக மக்களுக்காக உழைத்து வருவதாகவும், கொரோனா காலத்தில் ஓடோடி உழைத்ததால் ஏழரை கிலோ எடை குறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, தனக்கும் சுகர், ரத்தக்கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும், காலை நேரத்தில் உணவு அருந்தி விட்டு, மதியம் ஒரு மணி நேரம் தூங்கி காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு கூட முடியாமல் உழைப்பதாகவும் உருக்கமாக பேசினார்.

 இயேசு நாதர் சிலுவையை சுமந்ததுபோல, விராலிமலை தொகுதியை தான் சுமந்து கொண்டிருப்பதாகவும், ஏசுநாதர் தனக்கு கருணை காட்டுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments