திருச்சியில் ம.நீ.ம வேட்பாளரின் நண்பர் எனக் கூறப்படும் தொழிலதிபர் அலுவலகம், வீடுகளில் ஐடி ரெய்டு: ரூ.10 கோடி பறிமுதல்

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரது நெருங்கிய நண்பர் என்று கூறப்படுபவரின் அலுவலகம், வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னர் ஒருமுறை, திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்ற கமல்ஹாசன் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள மொரய்ஸ் சிட்டி மைதானத்தில் தரையிறங்கினார்.
இந்த மைதானத்தின் உரிமையாளர் தொழிலதிபர் லேரோன் மொரய்ஸ், மக்கள் நீதி மய்ய திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீர சக்தியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சியில் லேரோன் மொரய்ஸ் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் மாநில பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் 11 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments