சென்னை, கோவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 1670

சென்னை,கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க  திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக காசநோய் தினத்தை ஒட்டி ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவை இருந்தால் கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக அவர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய ராதாகிருஷ்ணன், சென்னையில் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய 13 இடங்களில் cluster கண்டறியப்பபட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments