நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 6 மீனவர்கள் படுகாயம்

0 1454
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 6 மீனவர்கள் படுகாயம்

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நாகை செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் 15 பேர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை பறித்ததாகவும், தடுக்க முயன்ற போது கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளி விட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடலில் இருந்த மற்ற மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பிய காயமடைந்த 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments