ஆளில்லா லெவல் கிராசிங்கில் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்..!

0 1440
ஆளில்லா லெவல் கிராசிங்கில் நொடிப் பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்..!

இந்தோனேஷியாவில் ரயிலுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்று நொடிக்கும் குறைவான நேரத்தில் இளைஞர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

மேற்கு ஜாவா பகுதியில் ஆளில்லா லெவல் கிராசிங்கில் ஒருபுறம் சில வாகனங்கள் ரயிலின் வருகைக்காக காத்திருந்தன.

அப்போது எதிர்முனையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், ரயில் வருவதைக் கண்டும் அதனை வேகமாகக் கடந்து சென்றார். அவருக்கும் ரயிலுக்கும் நடுவே சில அங்குல தூரமே இருந்த நிலையில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே அதிகாரிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலைக் கடந்த இளைஞரைக் கண்டுபிடித்து 40 பவுண்டுகள் அபராதமும், 3 மாதம் சிறைத்தண்டனையும் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments