சிந்து நதி நீர்ப்பங்கீடு குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ரகசிய பேச்சுவார்த்தை ?

0 672
சிந்து நதி நீர்ப்பங்கீடு குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ரகசிய பேச்சுவார்த்தை ?

சிந்து நதி நீர்ப்பங்கீடு குறித்து பேச்சு நடத்த எட்டு பேர் கொண்ட குழு பாகிஸ்தானில் இருந்து இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளது. 

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் அடுத்தவாரம் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் (dushanbe) நடைபெறும் மாநாட்டில் சந்திக்க உள்ளனர்.

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க இருதரப்பினரும் அண்மையில் உறுதி கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளும் விரைவில் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தையை ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயினும், இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments