புனேவில் இன்று நடக்கிறது இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி

0 5328
புனேவில் இன்று நடக்கிறது இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். 

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடத்தப்படுகிறது.

டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் விளையாட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் அனுமதியின்றி, பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments