மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று குறைந்தது

0 2341
மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று குறைந்தது

மகாராஷ்டிராவில் கடந்த இரு நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.

அம்மாநிலத்தில் இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றின் தாக்கம் அதிகமானால் மீண்டும் மாநிலம் தழுவிய பொதுமுடக்கம் அமலாக்கப்படும் என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு 24 ஆயிரத்து 645 ஆக இருந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 265 ஆகக் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments