ஈரோடு அருகே வாகனத் தணிக்கையில் 530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

0 2562
ஈரோடு அருகே வாகனத் தணிக்கையில் 530 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

ஈரோடு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 530 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மூலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் நகைக் கடைக்குச் சொந்தமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட 530 சவரன் தங்க நகைகள் இருந்ததால் அவற்றைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments