மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை மிரட்ட ஆட்களை நியமித்துள்ளதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

0 860
மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை மிரட்ட ஆட்களை நியமித்துள்ளதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை மிரட்டி வாக்குகளைப் பெற பாஜக வினர் ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கோட்டுல்புர், சோமகாய்த்தலா போன்ற பகுதிகளில் கடந்த 1990 முதல் 2000 வரை அட்டகாசம் செய்ததை நினைவு கூர்ந்த மமதா பானர்ஜி அப்போது தாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததாகத் தெரிவித்தார்.

அதே நபர்கள் இப்போது பாஜகவில் சேர்ந்திருப்பதாக அவர் சாடினார்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசு தற்போது வங்கிகளைக் குறிவைத்திருப்பதாகவும் மமதா பானர்ஜி விமர்சித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments