கொரோனா காலத்திய வங்கித் தவணைக்கு வட்டியை முழுமையாக ரத்து செய்யக் கோரும் விவகாரம் : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 1499
கொரோனா காலத்திய வங்கித் தவணைக்கு வட்டியை முழுமையாக ரத்து செய்யக் கோரும் விவகாரம் : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கொரோனா பாதிப்பை அடுத்து அனைத்து வகை கடன்கள் மீதான வட்டி குறைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட பல்வகை கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலையடுத்து ஆறுமாத காலத்துக்கு செலுத்தப்படாத தவணைத்தொகை மீதான வட்டிக்கு தாமத வட்டியைக் குறைப்பதாக வங்கிகள் அறிவித்தன.

ஆறுமாதத்திற்கு வட்டியை முழுமையாக ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய அரசு ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ,இன்று வழங்க உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments