சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் - முதலமைச்சர்

0 2328
சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் - முதலமைச்சர்

தமிழகத்தில் வீட்டிற்கே அதிகாரிகள் வந்து குறைகளைத் தீர்த்து வைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒருமித்த கருத்தோடு கூட்டணியை அமைத்திருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து கொண்டு வந்ததால் நாடே பாராட்டுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஓமலூர் தொகுதியில் குடிமராமத்து திட்டத்தினால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், மேட்டூர் அணை தொடங்கி அனைத்து அணைகள், ஏரிகள், குட்டைகள் நிரம்பியுள்ளதாகவும், குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை என்றும் தெரிவித்தார்

சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் விருது கிடைத்துள்ளதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறையில் பல்வேறு சாதனைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்தட்டுப்பாடு இருந்த காலம் போய், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். சேலத்தில் ராணுவ உதிரிபாக தொழிற்சாலை, ஜவுளிப்பூங்கா வரஉள்ளதாகவும், இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments