அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூல்

0 1609
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி வசூல்

த்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நன்கொடையாக இதுவரை 3ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலுக்காக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் இருந்து நிதி வசூலாகி வருகிறது.

இதன்மூலம், ராமர் கோயிலை கட்டும் பணிக்காக ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு 3ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி சேர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் இருந்து 557 கோடி ரூபாயும், தமிழகத்தில் இருந்து 85கோடி ரூபாயும் நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் செலுத்தப்பட்ட சுமார் 80 ஆயிரம் காசோலைகள் இன்னும் அறக்கட்டளையின் கணக்கில் சேரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments