கால் வலிக்காமல் ஈசியா வாக்கு சேகரிப்பது எப்படி ? தளவாய் சுந்தரத்தின் ராஜதந்திரம்

0 4144
கால் வலிக்காமல் ஈசியா வாக்கு சேகரிப்பது எப்படி ? தளவாய் சுந்தரத்தின் ராஜதந்திரம்

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, ஊரையே ஒரு இடத்திற்கு வரவைத்து வாக்கு சேகரித்து வரும் கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தின் ராஜதந்திரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கன்னியாகுமரியில் களம் இறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், இறச்சகுளம்,ராஜீவ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீராணமங்கலம் கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு சென்ற தளவாய் சுந்தரம், முன் கூட்டியே உள்ளூர் நிர்வாகிகள் மூலம் அவர்கள் அனைவரையும் அந்த ஊரில் உள்ள தேவாலய வளாகத்து வரவழைத்திருந்தார். அங்கு கூடியிருந்த பெண்களுடன் சேர் போட்டு அமர்ந்து சாவகாசமாய் பேசத்தொடங்கிய தளவாய் சுந்தரம் அவர்களிடம் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திடங்கள் மற்றும் செய்ய உள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார், அப்போது மிக்ஸி கொடுக்கப்பட்டதா ? என்ற சந்தேகமும் அவருக்கு எழுந்தது

தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெண்களிடம் பொன்னான வாக்குகளை யாருக்கு போடனும் எந்த சின்னத்தில் போடனும் ? என்று அவர் கேள்வி எழுப்பியதும் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் இரட்டை இலை என்று பதில் அளித்தார்

அதன் பின்னர் அருகில் அமர்ந்திருந்த 80 வயதை கடந்த மூதாட்டியிடம் மாதம் 1500 ரூபாய் பணம் கொடுக்கிறோம் மறக்காமல் ஓட்டுபோடுங்கள் என்றார். மருமகள்கள் மாமியாரை நல்லபடியாக கவனிக்க வேண்டும் என்று தளவாய் சுந்தரம் தெரிவித்ததும் அருகில் இருந்த மூதாட்டி தன்னுடைய மருமகள் நன்றாக தெம்பாக இருப்பதாக தெரிவித்தார்

அதன் பின்னர் வாகனத்தில் ஏறி பிரச்சாரத்துக்கு புறப்பட்ட தளவாய் சுந்தரத்தை வழியில் மறித்த இரு தொண்டர்கள் அவரிடம், இரட்டை இலை போன்று தோற்றம் அளிக்கும் சிறிய வாழைக்கன்றுகள் இரண்டை கையில் கொடுத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments