தெலங்கானாவில் கபடி மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரி உடைந்து விழுந்து விபத்து : நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் - மீட்பு பணிகள் தீவிரம்

0 1252
தெலங்கானாவில் கபடி மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரி உடைந்து விழுந்து விபத்து : நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் - மீட்பு பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் கபடி மைனாதத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த கேலரி உடைந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சூர்யா பேட்டையில் 47 ஆம் ஆண்டு கபடி போட்டி தொடங்க இருந்த நிலையில் சுமார் 1500 பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடதுபக்க கேலரி பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து கேட்டறிந்த தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உரிய மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments