கை சின்னத்துக்கு ஓட்டுப்போட்டால் ராகுல் பிரதமராம்..! சட்டமன்ற தேர்தல் ரூபி மனோகரன்

0 4328
கை சின்னத்துக்கு ஓட்டுப்போட்டால் ராகுல் பிரதமராம்..! சட்டமன்ற தேர்தல் ரூபி மனோகரன்

காங்கிரஸ் பலகீனமானால் அது நாட்டின் பலகீனம் என்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கை சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் ராகுல் பிரதமராவார் என்று கூறி தொண்டர்களை திகைக்க வைத்தார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மூத்த காங்கிரஸ் தொண்டர்களை கவர்வதற்காக லோ பட்ஜெட் சிம்ரனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், திறந்த வாகனத்தில் நின்ற படி தளபதி சமுத்திரம், மேட்டுக்காலனி, அணைக்கரை, ராஜக்காள் மங்கலம், ஆழ்வார்குளம், புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்திற்கு நடுவில் செய்தியாளர்களை சந்தித்த ரூபி மனோகரன், குடும்பதலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அரிக்கையை சுட்டிக்காட்டி சாந்தமாக பேசத்தொடங்கியவர், சட்டென்று நாட்டில் காங்கிரஸின் பலகீனம் என்பது நாட்டின் பலகீனம் , என்று ஆவேசப்பட்ட தோடு மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் மு.க ஸ்டாலின் முதல்வராகவும் வருவார் என உணர்ச்சி வசப்பட்டு பேசி, அனைவரையும் திகைக்க வைத்தார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தால் மத்தியில் எப்படி ஆட்சி மாற்றம் வரும், ராகுல் காந்தி எப்படி பிரதமராவார் ? என்பதை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் விளக்கினால் நன்றாக இருக்கும் என்பதே அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்களின் ஐயமாக இருந்தது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments