தமிழக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விகே சிங் ஆகியோர் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு, பட்டியலின மக்களிடம் வழங்கப்படும், தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும் , விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோன்று, மீனவர்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் ஆகிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
Comments