தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியது அ.தி.மு.க. அரசு - முதலமைச்சர்

0 1151
தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியது அ.தி.மு.க. அரசு - முதலமைச்சர்

கொரோனா காலத்திலும் தொழில்முதலீடுகளை ஈர்த்து, அதிமுக அரசு தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியிருப்பதாக முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாருக்கு ஆதரவு திரட்டினார்.

கொரோனா காலத்திலும் தொழில்முதலீடுகளை ஈர்த்து, அதிமுக அரசு தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியிருப்பதாக முதலமைச்சர் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக  தலைவர் ஜி.கே.மணி, தருமபுரியில் பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ், பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை அவர் பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார்.

பின்னர் அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது சொந்த உழைப்பில் படிப்படியாக முன்னேறி முதலமைச்சர் பதவி வரை உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

நம்பிக்கை தான் மனிதனின் பலம் என்றும் நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் தெரிவித்தார். தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் பழனிசாமி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணி ஆகியாரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

இதனிடையே திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments