இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு: மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 841
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு: மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து 8 வாரங்களில் பரிசீலிக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 18ம் தேதி கச்சத்தீவு பகுதியில் மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு, புதிய மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது.அரசு வேலை வழங்குவது பற்றி மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments