”நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இல்லை” -அமைச்சர் நிதின்கட்காரி

”நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இல்லை” -அமைச்சர் நிதின்கட்காரி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி - புதுச்சேரி வழியாக சென்னைக்கு கடல் நீர் வழி போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
புதுச்சேரி மீனவர்கள் 100 நாட்டிகல் மைல் தூரம் வரை சென்று மீன் பிடிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்திய நிதின்கட்காரி, புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் வளர்ச்சி அடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments