கோவிஷீல்டுக்கான 2 ஆவது டோசை 4- 8 வார இடைவெளியில் போட வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 1166
கோவிஷீல்டுக்கான 2 ஆவது டோசை 4- 8 வார இடைவெளியில் போட வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை தற்போதுள்ள 4 முதல் 6 வார கால இடைவெளிக்குப் பதிலாக, 4 முதல் 8 வார கால இடைவெளியில் போடுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த மாற்றம் கோவாக்சின் தடுப்பூசிக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த திருத்தத்தை, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், மத்திய அரசின் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments