உடல் நலக்குறைவால் காலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0 3020
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மதுரையில் இறந்து போன, நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்ற தீப்பெட்டி கணேசன். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் என 2 குழந்தைகள் உள்ளன.தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா என்ற  திரைப்படத்தில் அறிமுகமானவர். பின்னர் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு , மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவுக்கு குடும்பத்தில் வசதி இல்லை. இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். மதுரை ஜெய்ஹிந்த்புரம், ராமையா தெருவிலுள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்திருந்தார். பிரச்சாரத்தை முடித்து விட்டு  நேராக நடிகர் தீப்பெட்டி கணேசன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தீப்பெட்டி கணேசனின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments