தற்சார்பு இந்தியாவை உருவாக்க நீர் மேலாண்மை மிக முக்கியம்..! மழை நீர் சேமிப்பை அதிகரிக்க பிரதமர் மோடி அழைப்பு

0 666
இந்தியா சுயசார்பை எட்டுவது, கிடைக்கும் நீரின் அளவை சார்ந்துள்ளது..! மழை நீர் சேமிப்பை அதிகரிக்க பிரதமர் மோடி அழைப்பு

நாடு முழுக்க தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் பயிற்சி 4 லட்சம் மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மழை நீர் சேமிப்பு குறித்த காணொலி கருத்தரங்கில் பேசிய அவர், தண்ணீர் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தமக்கு, நீரின் முக்கியத்துவம் நன்றாக தெரியும் என்றார்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க நீர் மேலாண்மை முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். மழை நீர் சேகரிப்பை அதிகரிப்படுத்தினால், நிலத்தடி நீரை நம்பி இருப்பது குறையுமென அவர் கூறினார்.

நீரின் முக்கியத்துவத்தை மகளிரே அதிகம் உணர்ந்தவர்கள் என்பதால், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நீரின் தரத்தை பரிசோதிக்க மகளிருக்கு மத்திய அரசு பயிற்சி அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments