அதிகரிக்கும் கொரோனா தொற்று..! பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

0 1870
அதிகரிக்கும் கொரோனா தொற்று..! பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாட்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றி அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதை உறுதிபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், முகக்கவசம் மற்றும் கையுறை அணியவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிற நோய்கள் உள்ள 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களை பணியாட்களாக கொண்டுள்ள நிறுவனங்கள் அவர்களை கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments