தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2354
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த செய்திக்குறிப்பில், 24ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும்.

25,26 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 3 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments