போக்குவரத்துத் துறை மீது இணையவழித் தாக்குதல் நடத்தும் அபாயம்; சாலைப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை

0 1083
இந்தியப் போக்குவரத்துத் துறை மீது இணையவழித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பை வலுப்படுத்தும்படி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றை அரசு எச்சரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் போக்குவரத்துத் துறை மீது இணையவழித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பை அடிக்கடி ஆய்வு செய்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு பாதுகாப்புத் தணிக்கை மேற்கொண்டதன் அறிக்கையை அவ்வப்போது அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments